20 நாடுகள் பங்கேற்ற போட்டியில் திருச்சி மாணவர் அபார சாதனை ; குவியும் பாராட்டுகள்
20 நாடுகள் பங்கேற்ற போட்டியில் திருச்சி மாணவர் அபார சாதனை ; குவியும் பாராட்டுகள்
மலேசியாவில் நடந்தது 20 நாடுகள் பங்கேற்ற கராத்தே போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற திருச்சி மாணவனுக்கு சமூக ஆர்வலர்கள், கராத்தே பள்ளி மாணவர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
மலேசியாவில் 22 -வது இன்டர்நேஷனல் சாம்பியன்ஷிப் கராத்தே போட்டிகள் சமீபத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவன் ரோஹித் கராத்தே போட்டியில் கத்தா, கும்மிட்டி ஆகிய இரண்டு பிரிவுகளில் கலந்து கொண்டார்.
மாணவன் ரோகித் கலந்து கொண்ட இரண்டு பிரிவுகளிலும் வெள்ளிப் பதக்கங்களை பெற்று சாதனை படைத்தார்.
இரண்டு பிரிவுகளிலும் வெள்ளி பதக்கம் வென்று திருச்சி திரும்பிய மாணவருக்கு சமூக ஆர்வலர்களும் தராத்தை பள்ளி மாணவர்களும் தத்தம் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். மாணவன் ரோகித்க்கு மாஸ்டர் ஈஸ்வரன் பயிற்சி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
2
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0