ரூ.3000 லஞ்சம்; மின்வாரிய இள மின் பொறியாளர் கைது
ரூ.3000 லஞ்சம்; மின்வாரிய இள மின் பொறியாளர் கைது
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோம்பை கிராமத்தை சேர்ந்தவர் முத்து. இவரது விவசாய நிலத்திற்கு, இலவச மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்திருந்தார். தாட்கோ மூலம் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. அவருக்கு மின் இணைப்பு வழங்க கால தாமதமானதால் கடந்த 27ம் தேதி செங்காட்டுப்பட்டி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று மின்வாரிய இளம் பொறியாளர் ராஜு என்பவரை சந்தித்து இலவச மின் இணைப்பு வழங்க கேட்டுள்ளார்.
இந்த மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மின் இணைப்பு உடனே வழங்குவதாக இளம் பொறியாளர் ராஜு தெரிவித்துள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத முத்து திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறையில் புகார் செய்தார்.
அவரது புகாரின்படி வழக்கு பதிவு செய்த திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர் சக்திவேல் மற்றும் குழுவினர் புகார்தாரர் முத்து விடம் பொறிவைப்பு நடவடிக்கையாக கொடுத்து அனுப்பிய ரசாயனம் தடவிய மூவாயிரம் ரூபாயை துறையூர் மின் அலுவலகத்தில் வைத்து இள மின் பொறியாளர் ராஜு பெற்றபோது லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் லஞ்சம் வாங்கிய ராஜூவை கையும் களவுமாக பிடித்து அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் மின்வாரிய அலுவலகத்திலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் மின்வாரிய இள மின் பொறியாளர் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டது மின்வாரிய அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0