திருச்சியில் பூத்தட்டு ஏந்தி உற்சாக கொண்டாட்டம்
திருச்சியில் பூத்தட்டு ஏந்தி உற்சாக கொண்டாட்டம்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் இன்று காலை 9 மணிக்கு வெளியாகிய நிலையில் அந்த திரைப்படத்தை வரவேற்கும் விதமாக 50க்கும் மேற்பட்ட பெண்கள் பூந்தட்டி ஏந்தி ஊர்வலமாக திரையரங்கிற்கு வந்து திரையரங்க வாசலில் வைக்கப்பட்டுள்ள கூலி பிளக்ஸ் பேனர்களுக்கு மலர் தூவி உற்சாகமாக தாரை தப்பட்டை முழங்க மகிழ்ச்சி வெள்ளத்தில் கூலி திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்தனர்.
அதே போல், இன்று கூலி திரைப்படம் வெளியானதை முன்னிட்டு ரஜினி ரசிகரான ஆட்டோ ஓட்டுனர் ரஜினி சிவா என்பவர் இன்று ஒரு நாள் முழுவதும் சலுகை விலையில் ஆட்டோ ஓட்டுவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0