அடுத்து ஒரு வருடத்தில் 150 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர் திட்டமிட்டுள்ளார்- திருச்சியில் உதயநிதி ஸ்டாலின்

Feb 6, 2026 - 21:19
Feb 6, 2026 - 21:23
 0  24
அடுத்து ஒரு வருடத்தில் 150 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர் திட்டமிட்டுள்ளார்- திருச்சியில் உதயநிதி ஸ்டாலின்

அடுத்து ஒரு வருடத்தில் 150 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர் திட்டமிட்டுள்ளார்- திருச்சியில் உதயநிதி ஸ்டாலின்

தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை மேம்பாட்டு அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திருச்சி மாநகராட்சி, 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் மூலம் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். (திருச்சி மாவட்டத்திலுள்ள 401 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், 651 தொகுப்புகளுக்கும் இவ்விளையாட்டு உபகரணங்கள் 30 பொருட்களை உள்ளடக்கியதாகும்) 

இதனை தொடர்ந்து கடலூர், கரூர், நாமக்கல், இராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தினை காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.

மேலும், இவ்விளையாட்டுப் பொருட்களின் மேலாண்மை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்ளும் நோக்கில், ஆடுகளம் (TNSPORTS) மொபைல் செயலி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வடிவமைக்கப்பட்டு தற்போது Google Play Store- இல் பொதுப் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இச்செயலியின் மூலம் ஒவ்வொரு வார்டிலும் உள்ள விளையாட்டு உபகரணங்களின் இருப்பு நிலை (Stock). விநியோகம், பயன்பாடு மற்றும் தினசரி புதுப்பிப்புகளை ஆன்லைனில் கண்காணித்திடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டின் பொறுப்பாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பயனர் குறியீடு (User Name) மற்றும் கடவுச்சொல் (Password) மூலம் பாதுகாப்பாக உள்நுழைந்து செயல்படுத்தும் வகையில் வடிமைக்கப்படுள்ளது.

அடுத்து ஒரு வருடத்தில் 150 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர்கள் திட்டமிட்டுள்ளார்.

தொழில் வளர்ச்சி, கல்வி, சுகாதார விளையாட்டு தமிழ்நாடு ஆல்ரவுண்ட் மாநிலமாக மாறி உள்ளது. நமது அரசு முயற்சிகளுக்கு பல்வேறு திசைகளில் இருந்து அங்கீகாரம் குவிந்து வருகிறது. இந்த வளர்ச்சி மேலும் மேலும் அதற்கு உங்களுடைய ஆதரவு அரசுக்கும், முதலமைச்சருக்கும் தேவை.

இந்த கிட்டுகள் வாங்கும் விளையாட்டு வீரர்கள் இதனை முறையாக பயன்படுத்துங்கள், பாதுகாப்பாக வைத்திருந்து பயன்படுத்துங்கள். இந்த கிட்டை பயன்படுத்தி உங்கள் ஊர்களில் இருந்து நிறைய வீரர்கள் உருவாக எனது வாழ்த்துகள், பாராட்டுக்கள் என்றார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே. என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், அப்துல் சமது மாவட்ட ஆட்சியர் சரவணன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மேகநாதன்ரெட்டி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாநகராட்சி மேயர் அன்பழகன் உட்பட துறை அதிகாரிகள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் விளையாட்டு வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக, இதுவரை டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோயம்புத்தூர், திருப்பூர், அரியலூர், தர்மபுரி, ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், நீலகிரி, திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய 20 மாவட்டங்களில் உள்ள 11 மாநகராட்சிகள், 70 நகராட்சிகள், 248 பேரூராட்சிகளைச் சேர்ந்த 6,469 வார்டுகளுக்கு 9,868 விளையாட்டு உபகரணத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0